And this blogger is,

My photo
India
“I am not always good and noble. I am the hero of this story, but I have my off moments.”

Wednesday 16 March 2011

'The Merchant of Death' to Dark and Despair

"Yes, I now welcome the Merchant of Death,The merchant of death to terrorism;The merchant of death to corruption;The merchant of death  to beurocratic negligence;The merchant of death to neopotism;The merchant of death to Dark and Despair.He will address you"
     இந்த வரிகள் துக்ளக் ஆண்டு விழாவின் போது(14 .1 .2008 ), 'சோ' ராமசாமி அவர்கள் சிறப்பு விருந்தினரான திரு.நரேந்திர மோடி அவர்களை மேடைக்கு அழைத்த போது பேசியவை. அவர் பேசியது எவ்வளவு உண்மை என்பதை,எதிரொலித்த பலத்த கை தட்டல்கள் உறுதிபடுத்தின.
       குஜராத் வளர்ச்சி கடந்த பத்து வருடத்தில் எவ்வளவு என்பதை தனி ஆராய்ச்சி மூலம் கண்டறிய தேவையில்லை. மோடிக்கு எதிரான செய்திகளை ஆர்வத்துடன் வெளியிடும்  பத்திரிகைகளாலும் டெலிவிஷன்  சேனல்களாலும்                         கூட குஜராத் பல துறைகளிலும் அடைந்த முன்னேன்றத்தை  மறுக்கவோ  மறைக்கவோ முடியவில்லை. எதிர்கட்சிகளால் அவருடைய ஆட்சி முறையிலோ நேர்மையிலோ குறை கண்டு பிடிக்க முடியவில்லை.அதனால் தான்  இன்னும் கோத்ராவையே வட்டமடித்து கொண்டிருக்கிறார்கள்.
        நரேந்திர மோடிக்கு ஆதரவாக ஒருவர் பேசினால் அவர் மதவாதி  என்றும் எதிராக பேசினால் மதசார்மின்மைவாதி   என்றும் ஆகி விடுகிறது.இந்த வகையில் தான் திரு.நிதிஷ் குமாரின்  மதசார்பின்மைவாதம்  ராகெட்வேகத்தில் செல்கிறது.
        நாட்டில் எந்த மூலையில் தீவிரவாதிகள் கொல்லப்படும் போதும் அது ஒரு நாள் செய்தியோடு நின்று விடுகிறது.அனால் குஜராதில் கொல்லபட்டால் மட்டும் அவர்களுக்கு அதிர்ஷ்டமும் யோகமும் கிட்டி விடுகிறது.மனித உரிமை ஆர்வலர்களின் அருள் இஷ்ராத் ஜெகனுகும் ஷோரபுதீனுகும் மட்டும் எப்படியோ கிட்டி விட்டது.
           முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல.ஆனால் துரதிஷ்டவசமாக பெரும்பாலான தீவிரவாதிகள் முஸ்லிம்களாக உள்ளனர்.இந்த கசப்பான உண்மையை ஏற்று கொள்ளாமல் கொல்லப்படும் தீவிரவாதிகளைஎல்லாம் முஸ்லிம்களாக மட்டுமே சித்தரித்து அம்மதத்தை அவமானபடுத்துவது காங்கிரசா  அல்லது பாஜகவா?
          குஜராத் கலவரங்களை பொறுத்த வரை நரேந்திர மோடி என்ன தான் செய்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என தெரியவில்லை.பதற்றமிக்க சூழலில் இராணுவத்தை கூப்பிடாகி விட்டது.கலவரத்தை அடக்க துப்பாக்கி சூடும் நடத்தியாகிவிட்டது.ஆயிரக்கணக்கானவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தாகி விட்டது.அவ்வளவு பெரிய கலவரத்தை மூன்றே தினங்களில் கட்டுபடுத்தியாகி விட்டது.இன்னும் என்ன தான் செய்திருக்க முடியும்?சூப்பர் மேன் மாதிரி ஒவ்வோருவரையுமா காப்பாற்ற முடியும்?
       இதில் என்ன வேடிக்கை என்றால் அமெரிக்கா இவருக்கு விசா வழங்க மறுத்தது தான்.இதை செய்ய அமெரிக்காவுக்கு என்ன தகுதி உள்ளதென்று தெரியவில்லை..கோத்ரா ரயில் எரிப்பை பற்றி ஏன் யாரும் இதே கோபத்தோடு பேசுவதில்லை என்றும் புரியவில்லை.
       எதிர்கட்சிகள்,போலி  மதசார்பின்மைவாதிகள்,டெலிவிஷன்  சேனல்களின்  பொய்         பிரச்சாரத்தை முறியடித்து நரேந்திர மோடி பிரதமராகும் நாளுக்காக காத்திருக்கிறேன்.ஜெய்ஹிந்த்.

No comments:

Post a Comment